Wednesday, April 29, 2009

புற்று நோய் சிறுவனுக்கு உதவுங்கள்

இந்தச் செய்தியை தட்ஸ் தமிழ் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களைச் சரிபார்த்த பின்புதான் நிச்சயமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. புற்று நோய் எவ்வளவு கொடுமையான நோய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் ஒன்றூமே அறியாத 3 வயது சிறுவன் இதில் சிக்கியுள்ளது பரிதாபத்திற்குரியது. இந்த இடத்தில் நாம் ஜாதி மதம் என்பதையெல்லாம் தூக்கி வீசிவிட்டு மனித நேயத்திற்காக உதவிசெய்வோம். 

நம் கழுதையின் வாசகர்கள் நிச்சயம் ஏதாவது செய்யவார்கள் என்ற ஆவலில் இந்தப் பதிவைக் கொடுத்திருக்கிறேன். நாம் ஒருவருக்கு உதவி செய்தால் அதுபோல பண்மடங்கு நமக்குத் திரும்பக் கிடைக்கும். நன்றி. செய்தியின் முழுவிபரம் கீழே..

நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் எம். ஜெஹபர் சாதிக். புற்று நோயால் பாதிக்கப்படடுள்ள தனது 3 வயது மகனுக்கு சிகிச்சை அளிக்க பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார்.

இதுகுறித்து ஜெஹபர் சாதிக் கூறுகையில், எம். ஜெஹபர் சாதிக் ஆகிய நான் தற்போது குவைத்தில் டிரைவராக பணியாற்றி வருகின்றேன்.

இப்ராஹீம் என்ற எனது மூன்று வயது மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக புற்று நோய் ஏற்பட்டு திருச்சி GVN மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றேன். 

இந்நிலையில் GVN மருத்துவமனையினர் மேற் சிகிச்சைக்காக சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டார்கள். 

அவர்களின் அறிவரைப்படி நானும் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு என் பிள்ளையை அழைத்து சென்று காட்டினேன். அவர்கள் பல மருத்துவ சோதனைகள் செய்த பின், இறைவனின் கிருபையால் இந்நோயை குணப்படுத்தி விட முடியும் என்றும், உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். 

ஆனால், அவர்கள் கேட்கும் மருத்துவ தொகை என் சக்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இங்கு எனக்கு கிடைக்கும் சம்பளமும் மிகக் குறைவுதான். அப்படியிருந்தும் ஏற்கனவே என் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளேன்.

பிள்ளையை விட பணம் பெரிதல்ல என்பதால் எனக்கிருந்த ஒரே சொத்தான சொந்த வீட்டையும் விற்று விட்டேன்.
இப்படிப்பட்ட சூம்நிலையில் என்னால் இவ்வளவு அதிகமான தொகையை செலுத்தி மருத்துவம் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன். 

என் பிள்ளை பூரண குணம் அடைய வேண்டும் என்றால் உடனடியாக அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். என்னால் இயலாத இந்த நிலையால்தான் தங்கள் அமைப்பிடம் உதவி செய்யுமாறு அன்பு கோரிக்கை வைக்கின்றேன். 

என் பிள்ளையின் மருத்துவ செலவிற்கு தங்களால் இயன்ற உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்துடன் எனது மகன் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ விபரங்களையும், திருச்சி மருத்துவமனை மற்றும் அடையாறு மருத்துவமனை மருத்துவ அறிக்கைகளையும் இணைத்துள்ளேன என்று கூறியுள்ளார்.

அணுக வேண்டிய முகவரி..

எம். ஜெஹபர் சாதிக்,
564 / 393,
மெயின் ரோடு,
நாகூர் - 611002, நாகப்பட்டிணம் மாவட்டம்.
செல்போன் எண்: (+91) 9791775642 (சாதிக்கின் மைத்துனர் அன்சாரியின் எண்)

முகாம்: குவைத் - ID எண்: 263041505886 - செல்போன் எண்: (+965) 99180678

மேலும் விபரங்களுக்கு " www.thatstamil.com"

Sunday, April 26, 2009

Saturday, April 18, 2009

Thursday, April 16, 2009

அதிசய உலகம்: "அதிர்ச்சி தந்த துபாய் பாலைவனம்"

துபாயின் புஜைரா பகுதி பாலைவனத்தில் கிடந்த பாம்புகள் இவை. துபையில் வசிப்பவர்கள் பாலைவனத்திக் கடக்க வாய்ப்பு வந்தால் கவணம்Monday, April 13, 2009