Monday, March 30, 2009

"ஸ்பெசல்" காதலர்களுக்கு வாழ்த்துக்கள்


காந்திசிலை ஓரம் ஒதுங்குபவர்களுக்கும், மெரினா பீச் படகு மறைவில் பதுங்குபவர்களுக்கும், திருவல்லிக்கேணி லாட்ஜ்களில் ரூம் புக்செய்த நடுத்தரவர்க்க காதலர்களுக்கும், பார்க் செரட்டனில் ரூம் புக்செய்த உயர்ரக காதலர்களுக்கும், இதெற்கெல்லாம் வசதியின்றி மெரினாவுக்கு அப்பாயின்மென்ட் பெற்ற மற்றவர்களுக்கும், சாந்தி, தேவிபாரடைஸ் திரையரங்குகளில் ஓரசீட் புக்செய்தவர்களுக்கும், மெரினாபீச் குடையழகி கஷ்டமர்களுக்கும், 8+1 கஷ்டமர்களுக்கும், கோலாலம்பூர் ஓடியன், பினாங்கு வீனைஓடியன், சோலியா ஸ்டிரீட் ஆகியவற்றில் ஓரமாக காத்திருக்கும் கண்ணியருக்கும்,நேற்று இரவு 12 மணிக்கு தங்கள் கணவணின் செல் போனிலிருந்து பழைய காதலர்களுக்கு குருந்தகவல் அனுப்பிய கண்ணகியருக்கும்,நேற்று தங்கள் மணைவியர் செல்லுக்கு EC ரீசார்ஜ் பண்ணிய அப்பாவி கணவன்மார்களுக்கும் என் உளம் கணிந்த மணமார்ந்த காதலர்தின வாழ்த்துக்கள்

அதிசய உலகம்1












Thursday, March 26, 2009

அதிசய உலகம்










Wednesday, March 25, 2009

கபாலியாண்ட கேளு மாமே...,

* Karthikeyan G ...

* கபாலி்ணே, இந்தியா வல்லரசாகுமா?

முதல்ல இந்தியா நல்லரசு ஆகட்டும்,அப்புறம் வல்லரசு ஆகலாம்.,ஒருத்தன் 50 ரூபா கொடுத்துட்டு ஓட்டு கேட்குறான்னா அதுல அவனுக்கு எவ்ளோ லாபம்னு பாக்கனும்.இலவச சாமான் கொடுத்து ஓட்டு கேட்டா அந்த செலவெல்லாம் பலமடங்காக மீண்டும் நம்ம தலையிலேயே கட்டப்படும்னு நமக்குத் தெரியனும்.எவ்வளவு கோடி கொடுத்தும் தன் ஆட்சியை ஒருத்தன் ஏன் காப்பாத்திக்கொள்கிறான்?அதுலே அவனுக்கு அதைவிட பலமடங்காக கிடைக்கும் என்பதால். பசிக்கொடுமையால்(மட்டும்) 10ரூபாய் திருடியவனைப் படுக்கப்போட்டு மிதிக்கும் நம்ம காவல்துறை பைனான்ஸ் கம்பெனி நடத்தி பலகோடி அடிச்சவனுக்கு பந்தோபஸ்த் குடுக்குது.. இந்தியா நிச்சயமாக ஏழைநாடு அல்ல,அது சில முதலைகளின் வாயில் சிக்கி ஏழை நாடு போலத் தோற்றமளிக்கிறது.இந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கினாலே இந்தியா எங்கயோ போயிடும். நன்றி.தொடர்ந்து கேளுங்க. 

Nijam Khan...

* கபாலி சார்! திமுகவின் தொகுதிப் பங்கீடு பற்றி ஏதும் செய்தி உண்டா?

நீங்க "ஆப்பம் பங்கிட்ட குரங்கு" கதய கேள்விப்பட்டு இருக்கீங்களா? அந்த கததான் இப்ப திமுகவுல.ஓரளவுக்கு பிச்சி முடிஞ்சிச்சி திமுக‍‍‍‍‍‍‍******குறைந்த‌பட்சம் 20 அதிக பட்சம் 21 காங்*******குறைந்த‌பட்சம் 15 அதிக பட்சம் 16 வி.சி******குறைந்த‌பட்சம் 01 அதிக பட்சம் 01(கரணம் போட்டாலும் 2 கிடைக்காது) மமக****** குறைந்த‌பட்சம் 01 அதிக பட்சம் 02 மு.லீக்*****குறைந்த‌பட்சம் 01 அதிக பட்சம் 01 (ஒன்றே பெருக என்பதற்கு இவர்களே சிறந்த உதாரணம். 2 குடுத்தாலும் வாங்க மாட்டார்கள்)


*கரிமேடு கருவாயன் கூறியது...

* கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும், ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.

சரத்தின் வெற்றிவாய்ப்பு என்பது காளை மாட்டில் பால்கறக்க முயற்சி செய்வது போன்றது. ராதிகா போட்டியிட மறுத்தன் காரணம் அதுல (வேஸ்ட்டா) ஆகப்போற செலவ வேற ஒரு இளிச்சவாயன் தலையில கட்ட்லாமுன்னுதான். (உங்கள் கேள்விகளுக்கு நம்ம கடை கஷ்டமர் நம்பர் 1 குவாட்டர் கோயிந்தன் கூறியது... **கபாலி மாமா சரத்குமார் கட்சிக்கு வெற்றிவாய்ப்பி எப்படி இருக்கும்*** இதுக்கெல்லாம் எங்க அண்ணாத்தே கபாலி வோணாம்... நானே சொல்லிகிறேன். நாற்பதும் அவங்களுக்குதான். *** ராதிகா ஏன் போட்டியிட மறுத்துவிட்டார்.*** சீ எம்மு போஸ்டுக்குத்தான் நிப்பாங்களாம். இன்னா அண்ணாத்தே கரீட்டா நான் சொன்னது. நான் சொன்னத விட கரீக்கிட்டு மாமே)

 Karthikeyan G...

Q:: கபாலினே.. கலைஞ்சர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்டதிற்கு அவருக்கு "அமைதிக்கான நேபெல் பரிசு" கிடைக்கும் என கேள்விப்பட்டேன். உண்மையா?

கார்த்தி சார் படிக்கும் போது ஒழுங்கா படிக்கனும்.இப்டியா அரகொறயா படிக்கிறது.அந்த செய்தி என்னன்னா கலைஞ‌ர் ஈழ தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்திற்க்காகவும் பாடுபட்ட மாதிரி சிறப்பாக நடித்ததால் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு என்று தான் செய்தி வந்திருக்கிறது.எதையுமே பிளான் பண்ணாம பண்ணுனா இப்டித்தான். நம்ம கோயிந்தன் கொடுத்த பதிலையும் படிச்சிக்கிருங்க.அதுலயும் மேட்டரு இருக்கு ராசா.

* செந்தழல் ரவி ...

கபாலி மாமா,மோடி பிரதமரானா இந்தியா வல்லரசாவுமா ?

சாமி!இந்த மாதிரி அரசியல்வியாதிகள் இருக்கும் வரை யார் பிரதமரானாலும் இந்தியா இப்போதைக்கு வல்லரசாகாது.மோடியைப் பொருத்தவரை குஜாராத் கண்ட 25 வருட வளர்சிக்கும்,வெற்றிக்கும் தானே காரணம் என்பது போல விளம்பரப்படுத்தி வருகிறார். மற்றுமொரு குஜராத் போன்ற சம்வத்தால் வெளியரங்கில் மறுபடியும் இந்தியா தலைகவிழாமல் இருந்தாலே போதும்.இளைஞர்களை கணவுகானுங்கள்னு நம்ம அய்யா அப்துல் கலாம் சொன்னாரு.ஆனா நம்ம இளைஞன் தூங்கும் முன்பு இன்னிக்கி கணவுல நமீதா வருமா, நயந்தாரா வருமான்னு சிந்திச்சிக்கிட்டே தூங்கப்போறான்.வெளங்குமாய்யா!

*செந்தழல் ரவி ...

*கபாலி மாமா,நயந்தாராவை மிஸ் பண்ணிட்டேன் என்று சிம்பு அழுவானா அழுவமாட்டானா ?

இன்னா நெய்னா கேள்வி இது.கேள்வியே தப்பு. மிஸ்'ஸா இருந்த நயந்தாராவ மிஸஸ் ஆக்கிவிட்ட(புரியுதா கண்ணு! அதான்,அதேதான்) பெறுமை சிம்புவையே சேரும், மறுபடியும் ஏன் அவரை மிஸ் பண்ணிட்டோம்னு அழப்போறார்,.

*செந்தழல் ரவி ...

*கபாலி மாமா,நாடாளும் மக்கள் கட்சியோட தலைவர் யாரு ? மீதி பேரு என்னாத்தை ஆளுவாங்க

ராதிகா கஷ்டப்பட்டு கண்ணீர் வடிச்சி(சீரிய‌ல்லங்க) தண்ணீர் வத்திப்போய் சம்பாதிச்சிட்டு வர்ற காசை சுலோவோ சுவாகா பண்ணிடுறாரு சரத்து.மொதல்ல அவர் நல்ல கணவனா வீட ஆளட்டும்.பொறவு நாட ஆளலாம் என்பதே அரசியின் கருத்தாக இருக்கலாம்.குவாட்டர் 

*குவாட்டர் கோயிந்தன்  ...

*இன்னா அண்ணாத்தே நம்ம ரவி அண்ணாத்தேக்கு ஜவாபு கொடுக்கமே, சும்மா கீறே.

ஏன் மாமு இன்னிக்கி ஒன்னான்ட எதுவும் பதிலு இல்லியா.ஜாவாபு கொடுத்துகினேன் பாரு நைனா.

*Raja Shankar ...

*கபாலி அண்ணே நம்ம தமிழ்நாட்டுல இருந்து பல பேர் மத்திய அரசுல அமைச்சரா இருந்து கடந்த அஞ்சு வருசமா என்ன சாதிச்சாங்க அண்ணே

ஹலோ! என்ன கேள்விங்க இது.இதுக்கு மேலயும் அவங்க சம்பாதிச்சி IT(Income Tax) ரைடுல மாட்டனும்.அந்த நியூஸ பாத்து நீங்க ஆனந்தப் படனும்னு ஆசையா. என்ன இது சின்னப்புள்ளத் தனமா

Raja Shankar ..

*தலிவா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைல அப்படி என்ன தான் இந்த பய புள்ளக பேசுவாங்களோ தெரிலயே

ராஜா சார், நீங்க கல்யாண மண்டபத்துல பந்தி நடக்கும் பாத்திருக்கிறீங்களா! முதல் பந்தியில் வடை,பாசாயம்,அப்பளம்,கூட்டு பொரியல் என எல்லாம் கிடைக்கும்,இரண்டாவது பந்தியில வடையும் பாயாசமும் இருக்காது பிறகு பிறகு சாப்பிட்ட இலைகள் எடுக்கப்பட்டு வெளியே கொட்டப்பட்டும்.இலை கொட்டிய சவுண்டு கேட்டதும் அதுல இருக்கிற மிச்சமீதிக்கினே ஒரு கூட்டம் வரும். ஓகே! இப்ப உங்க கேள்விக்கு வருவோம். முதல் பந்திங்கிறது மெயின் கட்சி,இரண்டாவது பந்திங்கிறது கூட்டணி கட்சி கடைசியா வெளிய கொட்டப்படும் மூன்றாவது பந்தி நம்ம லட்டர் பேடுகள்.

இராகவன் நைஜிரியா ...

*மை டியர் கபாலி,

அரசியல் பத்திதான் கேள்வி கேட்கணுமா நைனா.. இல்ல வேற எத பத்தியாவது கேள்வி கேட்கலாமா?

எனக்கு ஓரளவுக்கு தெரிஞ்சா டிரைபண்ணுறேன் வேறதப்பத்தியும் கேளுங்க மைடியர் அண்ணே!கஷ்டமா கேட்டுப்புடாதிய சாமி.இது வர என் வாழ்க்கையில நடந்த எல்லா எக்ஸாமுலயும் நான் பிட்டு அடிச்சித்தான் பாசாயிருக்கேன்.

*இந்த word verfification ஐ எடுத்துடு நைனா.. எடுத்துட்டு, எடுத்துட்டேன் அப்படின்னு ஒரு பதில் போடு மாமே?எடுக்கமாட்டேன் என்றால் ஏன் எடுக்க மாட்டேன் என்று ஒரு பதில் போடு மாமே?

நீங்க சொல்லி நான் மறுப்பேனா,எடுத்துட்டன்.ஆனா மொதல்ல கவணிக்கலண்ணே! நன்றி

? தமிழ் நாட்டில இப்ப வோட்டு ரேட்டு என்ன நைனா? வெளியில் தெரிஞ்சு எவ்வளவு? தெரியாம எவ்வள்வு?

இன்னும் அது கவுண்டிங்ல வரலண்ணே! ஆனா கட்சித்தலைவருங்க கிட்ட வேலை பாக்குற எடுபுடிகள் அங்க இவ்வோ குடுத்தேன்,இங்க இவ்வோ குடுத்தேன்னு அள்ளிவுட்டு தலீவருங்க கிட்ட பணங்கறக்குதுங்க‌

?தேர்தல் அப்படிகின்றதால, குவாட்டர் ரேட் எல்லாம் குறைஞ்சுடுச்சா நைனா? இல்ல ஏறிடிச்சா? சரக்கு கிடைப்பதில் கஷ்டம் இருக்கா நைனா?

விலை ஏத்தித்தான் விப்பானுங்க அண்ணே! இந்த நேரத்துல தான் உசாரா இருக்கனும்ணே. ஏன்னா கூட்டத்தோட கூட்டமா டூப்லிகேட் சரக்க நுழச்சிடுவாய்ங்கே.ஆனா தமிழக அரசு தரும் ஒரிஜினல விட டூப்லிகேட் எவ்வோ பராவாயில்ல.

அண்ணே! ஒரு ரிக்குயிஸ்ட்டு.உங்களுக்கு யார் மேலாயவது செம காண்டு இருந்தா அத உடனே நம்ம கோயிந்தன் மேல காட்டித் தீத்துக்குங்க.



உங்கள் கேள்விகளை கீழே கமெண்டில் எழுதவும்




Tuesday, March 24, 2009

ஏன் சிரிப்பொலி ? கலைஞர் காமெடி கடிதம்

உடன்பிறப்பே! ஈழம் ஒருபுறம் எரியதமிழகம் ஒருபுறம் கொதிக்கதங்களை தமிழின தலைவர்கள் என சொல்லித்திரிபவர்கள் தங்கள் நாடகங்களை அறங்கேற்ற, நானும் என் பங்குக்கு ஓரளவிற்கு செய்ய, ஒன்றுமே வேலைக்காகாமல் போய்விட்டது. நான் என்செய்வேன்40 MP களும் ராஜிணாமா செய்வார்கள் என்று நான் பிரதமரிடம் கூறிய போது அவர் ரிஸீவரை லைனிலேயே வைத்துவிட்டு தடாலென தரையில் வீழ்ந்துபுரண்டு புரண்டு சிரித்தாரேஅப்போது நான் அந்த அவமானங்களை தாங்கிக்கொண்டு அண்ணா வழியில் எதையும் தாங்கும் இதயமாக நின்றதெல்லாம் யாருக்காக ? உணக்காகத்தானே உடன்பிறப்பே! 

இப்போது நீங்களெல்லாம் உசாராகி விட்டதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆமாம் நானும் அழுது அழுது கண்கள் பொங்கி விட்டன. கடிதம் எழுதி எழுதி கை வீங்கிவிட்டது. உலகத்தமிழர்களின் அழுகையை நிறுத்த நான் எடுத்த சிறுமுயற்சி தான் இந்த செருப்பொலி, மன்னிக்க சிரிப்பொலி. இந்த காமெடி சேனலை நீங்கள் பார்ப்பது மூலம் உங்கள் கவலைகளை மறக்கலாம். இலங்கைத்தமிழர்கள் இனியும் கவலைப்படவேண்டா. "டயலாக் டிவி" வழியாக உங்களுக்கு சிரிப்பொலி கிடைக்கும்.  மக்கள் டிவியைப் பார்த்துப் பார்த்து மண்டையை சொரிந்து கொண்டிருக்கும் மலேய தமிழர்கள் இனி "அஸ்த்ரோ" வழியாக சிரிப்பொலியைக் காணலாம். தமிழகமே! இன்னும் இசையருவிக்கே இடமளிக்காமல் இழுத்தடிக்கும் என் இதயம் இனித்த இம்சைகளின் சன்குழுமம் சிரிப்பொலியை சிதைக்காமல் அளிக்குமா என்பது சந்தேகமே! நான் சிரிப்பொலியென்றால் அவர்கள் ஆதித்யா என்கிறார்கள். நான் என் செய்வேன்..,மாற்றச் சொல்ல முடியாது அந்தப் பெயரை. ஆதித்யா என்பது என் கண்மணி கணிமொழியின் மகனல்லவா?  பாருங்கள் என்குடும்ப சிக்கலைஅது காய்ந்து போன இடியாப்பம் போன்றது,  பிரிக்க நினைத்தால் உடைந்து விடும். எந்தமிழ்மக்களே! உங்கள் துயரங்களைப் போக்க சிரிப்பொலி பிப்ரவரி 09 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. தமிழகம் இலங்கை மட்டுமின்றி உலகமே சிரிப்பாய் சிரிக்கட்டும். -கலைஞர்

 

Monday, March 23, 2009

கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்


ஏறிய ஏணியை எட்டி உதைப்பது தமிழ் நாட்டுக்கு ஒன்னும்  புதுசு கெடயாது. தமிழக சினிமா ரசிகர்களுக்கு சில நேரங்களில் சொரணையற்றுப் போய்விடும்.அப்போது நாய் கடித்தாலும் நாலு நாளைக்குத் தெரியாது. அந்த வகையில் தமிழக சினிமா ரசிகர்கள் குறிப்பாக ஏழை ரசிக கண்மணிகள் தங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவற்றை கொட்டி கொட்டி போஸ்டர் அடித்து பேனர் கட்டி இன்று மிகபிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய்.சென்னை மாநகராட்சியில் கூவந‌திக்கரையோரம் குந்திகினு இருப்பவர்ககளும்வானமே கூரையாய் பிளாட்பாம்களில் படுத்துக் கிடப்பவர்களும் எம்ஜிஆரை அடுத்து  விஜயையே கொண்டாடுகின்றனர் என்பது அந்த ஏரியா வாழ் மக்களுக்கு நன்கு தெரியும். இதனால் தான் என்னவோ பணமுதலைகளும்கையில்லாத டீசர்ட்,கழுத்தில்லாத டீசர்ட்,  சில நேரங்களில் துணியே இல்லாத‌  டீசர்ட் அணிந்த‌ நவரச மங்கைகளும்IT பெருமக்களும் பெருமளவு கூடி க் கும்மியடிக்கும் சத்யம் திரையரங்கில் விஜய் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டார்களாம். இது நான் சொல்லவில்லை. அந்தரங்கத்தில் (அந்த+அரங்கத்தில்) வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் சொன்னது.

இப்ப என்னா மேட்டருனா ஒரு காலத்திலே தன் அருமை தந்தை தமிழக பிட்டு பட உலகின் குரு திரு.சந்திரசேகர் எடுத்துவந்த(பிட்டு)  படங்களில் நடித்து ரசிகர்களினால் கவரப்பட்டு (ஏன் கவறாதுசகீலா படங்களின் வருகைகைக்கு முன் இவர் படம் தான் ரேட்டிங்கில் இருந்தது) முன்னனி ஹீரோவாய் உயர்ந்த விஜயின் சமீபத்திய‌ மிக பிரம்மாண்டமான வெற்றிப் படமான வில்லுவின் ரேட்டிங் குறித்து அறிவதற்காக அதன் இயக்குனர் பிரபுதேவாவை கையிலே பிடித்தபடி ஊர் ஊராய் சுற்றி வந்த விஜய்க்கு வில்லங்க பகவான் திருச்சியிலே தரிசணம் கொடுத்துவிட்டார்.

உங்களுக்குத் தான் எம்ஜிஆர்,ரஜினி ஸ்டைல் ஒத்துவரலியே அப்றம் ஏன் இந்த   ள‌விற்கு ரிஸ்க் எடுக்கிறீங்க என ஒருஉள்ளூர் தொலைக்காட்சி நிறுபர் NDTV,BBC லெவலுக்கு கேள்வி கேட்ஏற்கனவே வில்லுவின் விவகாரத்தில் கடுப்பிலிருந்த விஜய் சம்மந்தமே இல்லாமல் அங்கிருந்த ரசிகர்களை நோக்கி "டேய்...,பேசிக்கிட்டு இருக்கோம்ல...,,சைலண்ஸ்" என தன் கோபத்தை கொட்டிவிட்டார். அவர் கத்துவதை அருகில் இருக்கும் பிரபுதேவா உள்ளுக்குள் பயத்தோடு, "ஆஹா இவன் இருக்கும் கடுப்புல கொஞ்சம் வுட்டா நம்மள கடிச்சே கொன்னுடுவான்" என நினைத்தவாறே திரும்பிப் பார்க்கிறார். நம்ம கேள்வி என்னன்னா ஒன்னு உன் கோபத்த பிரபுதேவா மேல காட்டியிருக்கனும்இல்ல அந்த நிறுபர் மேல காட்டியிருக்கனும் அத விட்டுட்டு ரசிகர்கள் மேல உன‌க்கு ஏன் இந்த வெறிஅதற்குப் பிறகு அவர்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் சென்றது என்ன ஆணவம்.முட்டாள் ரசிகர்கள் அவன் டேய்னு சொன்ன அடுத்த நிமிடம் 10 சேரை பறக்க விட்டிருந்தாஇன்னேரம் மன்றத்திலிருந்து 10 பேர் விலகியிருந்தா விஜய்க்கு இது ஒரு பாடமாக இருந்திருக்கும். "என்னை வாழ வைக்கும் ரசிக தெய்வங்க‌ளேன்னு" இனி எவன் சொன்னாலும் நம்ப‌க்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களெல்லாம் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலுமே நடிப்பவர்கள் தான்.இப்ப மீண்டும் மேலே உள்ள‌  நீல வரிகளைப் படிங்க.

ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா.

விஜய் குடுத்த சவுண்ட பார்க்க‌ கீழே அமுக்குங்க.அட மவுஸத் தாங்க.





கலைஞர் கொடுத்த வெளம்பரம்

28/02/2009 பத்திரிக்கைகள் முழுவதும் கலைஞர் கொடுத்த விளம்பரத்தால் நிரம்பி வழிகின்றன.
இது தான் கலைஞர் கொடுத்த விளம்பரம். ஆனா இதெல்லாம் எங்க இருக்குன்னு நமக்குத்தெரியல.கலைஞருக்குப் போட்டியா நாமளும் வெளம்பரம் குடுத்திருக்கோம் பாருங்க‌