Monday, March 23, 2009

13B-மாய மாளிகை மர்மங்கள்

மாதவனின் நடிப்பில் பிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்துள்ள படம் தான் 13B.அம்மா, அண்ணன்,அண்ணி, தங்கை மற்றும் அண்ணன் குழந்தைகளோடு மாதவன் 13வது தளத்தில் B வீட்டில் குடியேறுகிறார். மகிழ்சியாக கழியும் பொழுதுகளில் ஒரு நாள் அவர் கீழே வருவத‌ற்காக‌ லிப்டில் ஏற, லிப்ட் வேலை செய்யாமல் நின்று விடுகிறது.உடனே அவர் படிக்கட்டு வழியாக இறங்கி வருகிறார்.ஆனால் அவருக்குப் பின்னால் தன் கருப்பு நாயுடன் வரும் கண்தெரியாதவர் அந்த லிப்டில் ஏறி கீழே வருகிறார்.அப்போது இதை மாதவன் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடுகிறார்..ஒரு நாள் சாமிப்படங்கள் மாட்டுவதற்கு ஒரு அறையைத்தேர்வு செய்து ஆணியடிக்க முயற்சிக்கிறார் மாதவன். அவருடைய கையில் சுத்தியல் பட்டு இரத்தம் கொட்ட அது "B" வடிவில் தரையில் தெரிகிறது.உடனே கையில் ஒரு பிளாஸ்டர் ஒட்டிக்கொன்டு படுக்கச் செல்லும் முன் பாத்ரூம் சென்று விட்டு லைட்டை அணைத்து விட்டு படுக்கையில் சாய்ந்து திரும்பிப் பார்த்தால் அங்கே மீண்டும் லைட் எரிகிறது.திகிலுடன் அங்கு சென்று சுவிட்சை ஆப் செய்ய நினைத்தால் அங்கு ஏற்கணவே சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.குழப்பத்தில் நிற்கும் போதே அந்த பல்ப் திடீரென வெடிக்கிறது.இதனால் அவர் நெற்றியிலும் காயம் ஏற்பட அங்கேயும் ஒரு பிளாஸ்டர் ஒட்டிக்கொள்கிறார். அடுத்த நாள் காலையில் அவர் அண்ணன் மகன் விளையாட்டாய் அவரது கேமிரா மொபைலில் மாதவனை படமெடுக்கிறார்.பிறகு தான் வேலை செய்யும் சைட்டுக்கு செல்லும் மாதவன் எதார்த்தமாக காலையில் எடுக்கப்பட்ட அந்த படத்தை பார்க்க அவருக்கு குழப்பம். காரணம் அந்த படத்தில் மாதவன் முகம் கோனலாக வளைந்து நெளிந்து தெரிகிறது.தன் போனில் ஏதேனும் கோளாறோ என மீண்டும் தன்னையே படமெடுக்க இப்போது படம் தெளிவாக வருகிறது.குழப்பத்துடன் வேலை செய்கிறார்.

இந்த நிலையில் மாதவனின் வீட்டில் உள்ள பெண்கள், சீரியல் பார்க்க டிவி முன் அமர மாதவனின் தங்கை சேனல்களை மாற்றிக்கொண்டே வரும் போது 13வது சேனலில் டிவி தானாக லாக் ஆகி அங்கே EYE TV என்ற ஒரு சேனலில் "சாப் கைரியத்" என்ற சீரியல் புதிதாகத் தொடங்குகிறது. அதில் இதே போன்ற ஒரு குடும்பம் ஒரு புது வீட்டுக்கு குடியேறி வந்து குரூப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.மாதவன் வீட்டிலும் அதே போன்ற குரூப் போட்டோ இருக்க நமக்கு இங்கே கிலி பற்றிக்கொள்கிறது. வீட்டிற்கு வரும் மாதவன் மீண்டும் லிப்டில் ஏற அது வழக்கம்போல ஒர்க் ஆகாமல் அடம் பிடிக்க இவருக்கு சின்ன சந்தேகம் ஏற்படுகிறது.படியேறி வீட்டுக்குச்சென்று டிவி முன்னால் அமர சரியாக 13:00 (1 மணி) மணிக்கு 13வது சேனல் தானாக ஆன் ஆகி அந்த சீரியல் ஆரம்பமாகிறது. "இதுவரை" என சில நேரம் முன்னோட்டக் காட்சிகள் விரிய அந்த சீரியலில் வரும் ஹீரோ,மாதவனைப் போல தலையில்,கைவிரலில் ஒரு பிளாஸ்டர் போட்டுக்கொண்டு இருக்கிறார்.இதைப் பார்க்கும் மாதவனுக்கு சிறிய சந்தேகம் கிளம்ப அடுத்த காட்சியில் அந்த ஹீரோவின் அண்ணன் "எனக்கு பிரமோசன் கிடைத்து விட்டது" என கூறுவதோடு சீரியல் முடிந்து விடுகிறது. டிவியை ஆப் செய்து விட்டு மாதவன் உட்கார்ந்திருக்க உள்ளே நுழையும் அவரது அண்ணன் ஹாய் எனக்கு பிரமோசன் கிடைத்து விட்டது என‌ ஸ்வீட் கொடுக்க மாதவனுக்கு மட்டுமின்றி நம‌க்கும் கதிகலங்க ஆரம்பிக்கிறது.

அடுத்த நாள் அந்த சீரியலை பார்க்கும் மாதவன் அதில் ஹீரோவின் மனைவி 5 மாத கர்ப்பம் என கூறுகிறாள். உடனே மாதவன் தன் மனைவியிடம் ஏதும் விசேசமா என கேட்க அவர் ஒன்னுமில்லை என கூறியதும் நிம்மதியுடன் சைட்டுக் செல்ல அங்கு அவருக்கு போன் வருகிறது. மறுமுணையில் மனைவி. தான் 5 மாதம் என கூறுகிறார்.தன் வீட்டில் ஏதோ நடப்பதாக உறுதி செய்யும் மாதவன் ஒரு நாள் அந்த கண்தெரியாதவரை தன் வீட்டுக்கு அழைக்க அவர் தன் நாயோடு வருகிறார்.ஆனால் அந்த நாய் உள்ளே வர மறுத்து அடம்பிடித்து ஓடி விடுகிறது.குழப்பமடையும் மாதவன் தன் செல் போனை எடுத்து வாசல் நிலைப்படிக்கு உள்பக்கமாக நின்று தன்னை போட்டோ எடுக்க வழக்கம் போல அவரது முகம் கோணல்மானலாக தெரிகிறது..அப்படியே ஒரு ஸ்டெப் வெளியே வந்து மீண்டும் படமெடுக்க இப்போது நார்மலாகத் தெரிகிறது.மீண்டும் சீரியல் ஆரம்பமாக அதில் ஹீரோவின் மனைவி கீழே விழுந்து கர்ப்பம் கலைகிறது.அதைப் பார்த்து அதிர்சியடையும் மாதவன் தன் மனைவியைப் பார்க்க அவள் நார்மலாக இருக்கிறாள்.அப்போது அவர் செல் ரிங் ஆக அதை எடுத்து பேசிக்கொண்டிருக்கும் போது ஆ....,வென அலரும் சத்தம்திரும்பிப்பார்த்தால்..,,

தன் மனைவி இரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்கிறாள்.சீரியலில் போலவே அவளது கர்ப்பம் கலைந்து விடுகிறது. அவளை பெட்டில் சேர்ந்து விட்டு மருந்து வாங்குவதற்காக மெடிக்கலுக்குச் செல்ல அங்கே ஒரு பழைய பேப்பரில் டிவி நிகழ்சிகளின் பட்டியல் இடம் பெற்றிருக்க 13:00 (1 மணி) க்கு என்ன நிகழ்சி எனத் தேடுகிறார். அந்த டயத்தில் அதே "சாப் கைரியத்" என்ற பெயர் இடம்பெற்றிருக்க அந்த டைரக்டரைத் தேடி அந்த டிவி ஸ்டுடியோவிற்குச் செல்ல அங்கு வாசலில் நிற்கும் செக்யூரிட்டியிடம் தான் ஒரு ஸ்பான்சர் என்றும் "சாப் கைரியத்" க்கு ஸ்பான்சர் பண்ண வந்துள்ளதாகவும் தெரிவிக்க அந்த செக்யூரிட்டி தற்போது உள்ளே "சாப் கைரியத்" தின் சூட்டிங் தான் நடக்கிறது என்று கூறி அவரை உள்ளே அழைத்துச்செல்ல அங்கே கானும் காட்சி மாதவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

காரணம் "சாப் கைரியத்" என்பது சீரியலே அல்ல அது "கோடீஸ்வரன்" போன்ற ஒரு குவிஸ் புரோக்கிராம்.  நிலை குலைந்து இந்த சம்பவங்களை தன் போலீஸ் நண்பரிடம் சொல்ல அவர் கைகொட்டி சிரிக்கிறார்.சீரியஸாகும் மாதவன் சரி நீ என்னோடு என் வீட்டிற்கு வா,சோதனை செய்து பாக்கலாம் என அவரை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு விரைகிறார்.வீட்டிற்கு சென்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது சீரியல் ஆரம்பமாகிறது.அதிலும் இதே போல அந்த ஹீரோ தன் போலிஸ் நண்பரை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார்.அப்போது அந்த போலீஸ் நண்பருக்கு ஒரு போன்கால் வருகிறது.அதிலே அவரது மனைவி கேஸ் ஸ்டவ் வெடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வர இருவரும் ஆஸ்பத்திரிக்கு ஓடுகின்றனர்.உடனே மாதவன் அவர் நண்பரிடம் உடண‌டியாக உன் மனைவிக்கு போன் செய் என்று சொல்லி விட்டு அவர் வீட்டை நோக்கி காரில் விரைகிறார். போலீஸ்காரர் மனைவி கேஸை ஆன் செய்துவிட்டு வெளியே வந்து போன் பேசிக் கொண்டிருக்க வந்து சேரும் இருவரும் அவரை காப்பாற்றிவிடுகிறார்கள்.

மறுநாள் இரவு வீட்டுக்கு வரும் மாதவன், அந்த கண்தெரியாதவரின் கருப்பு நாய் அந்த பிளாட்டின் ஒரு மூலையில் எதையோ தோண்டிக்கொண்டிருப்பதைக் காண்கிறார். அந்த நாயைப் பிடித்து அவரிடம் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்குச் சென்று படுக்கையில் தன் மனைவியிடம் இன்று சீரியலில் என்ன வந்தது என கேட்கஅதற்கு அவள் ஒரு நாய் ஓடிச்சென்று ஒரு இடத்தை தோண்டுகிறது அத்தோடு தொடரும் என போட்டு விட்டார்கள் என்கிறாள். திடுக்கிட்டு எழும் மாதவன் வேகவேகமாக கீழேயிறங்கி அந்த நாய் தோண்டிய இடத்தை மீண்டும் ஆழமாகத் தோண்டி உள்ளிருந்து சிறிய பெட்டியை எடுக்கிறார். பெட்டியில் பழைய 1977 வருட கருப்புவெள்ளை போட்டோ ஆல்பத்தை இருக்கிறது. அதைத்திறந்து பார்க்கும் அவருக்கு அதிர்ச்சி.காரணம் அந்த போட்டோ ஆல்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த சீரியலில் வருபவர்கள். நூலகத்திற்குச் சென்று 1977 வருட பேப்பர்களை புரட்டும் போது அந்த படத்தில் உள்ள அனைவரும் ஒரு சைக்கோவால் குடும்பத்தோடு ஒரே நாளில் சுத்தியலால் அடித்துக்கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், அடுத்த நாளே முன்பு சீரியலில் வந்த அதே போலிஸ் ஆபிசரும் அதே வீட்டில் தூக்கில் தொங்கியதாகவும் செய்தி இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த வீட்டு முகவரியைக்கானும் மாதவன் அதிர்சியடைகிறார்.காரணம் இவரது அப்பார்ட்மெண்ட் இருக்கும் அதே முகவரி தான் அந்த பழைய சம்பவம் நடந்த வீடு இருந்த இடம்.அந்த வீட்டின் எண் 13,இப்போது இவர்கள் இருக்கும் பிளாட்டின் எண்னும் 13.

அடுத்த நாள் இருவரும் ஒரு பிரபல மனோதத்துவ டாக்டரிம் கன்சல்டிங் செய்துவிட்டு திரும்பும் போது போலிஸ் நண்பர் மாதவனிடம் நீ உன் மனைவிக்கு போன்செய்து சீரியலில் இன்று என்ன வந்தது என கேள்என்க மாதவன் தன் மனைவிக்கு போன் போட்டு இன்று சீரியலில் இன்று என்ன வந்தது என கேட்க, அவர் சொல்லும் பதிலைக்கேட்டு மாதவன் அதிர்சியில் உறைகிறார்.ஆம் அன்றைய சீரியலில் ஒருவன் கைப்பிடியில் சிகப்பு வளையம் போட்ட ஒரு சுத்தியலால் அந்த குடும்பத்தையே அடித்துக்கொன்று விடுகிறான் என அவளது மனைவி சொல்லியதைக் கேட்டு பயத்தோடு விரையும் மாதவன் கட்டிலில் படுத்து தூங்கிவிடுகிறார்.திடீரெண ஏதோ சத்தம் கேட்க வேகவேகமாக கீழே இறங்கி வரும் மாதவன் அங்கு ஒருவன் சுத்தியலோடு படியேறுவதைக்கண்டு அவனைத் துரத்திக்கொண்டு ஓடி சுற்றி சுற்றி படியேறிப் பார்த்தால் அங்கு மீண்டும் மீண்டும் 2வது தளம்,2வது தளம் என தகவல் போர்டு காட்டுகிற‌து.மாதவன் மீண்டும் மீண்டும் படியேறி ஓட எத்தனை முறை சுற்றிவந்தாலும் அங்கு உள்ள போர்டு 2வது தளம் எனக் காட்டுகிறது.ஆனால் அவன் மட்டும் ஏறி 13 வது தளத்திற்குச் சென்றுவிடுகிறான்.கடைசியில் அவனை விரட்டிக்கொண்டு உள்ளே வர அந்த ஆள் மாயமாகி விடுகிறான்.அப்போது டிவி தானாக ஆன் ஆகி அந்த சீரியல் மீண்டும் ஓட அதிலே அதே கொலைகாரன் இரத்தம் சொட்ட சொட்ட சிகப்பு வளைய சுத்தியலை இழுத்துக்கொண்டு செல்கிறான்.ஒரீடத்தில் அவன் திரும்பிப் பார்க்கஅது யார் என்று அவனது முகத்தைப் பார்க்கும் மாதவனுக்கு மட்டுமின்றி நமக்கும் கூட பெரிய அதிர்ச்சி. உடனே ஓடிச்சென்று தான் கண்ட காட்சியை தன் போலீஸ் நண்பனிடம் சொல்வதற்காக‌ அவனுடைய வீட்டிற்குச் செல்லும் மாதவன் அந்த வீட்டுத் தோட்டத்தில் டிவியில் பார்த்த அதே சிகப்பு வளையம் போட்ட சுத்தியல்.........................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிறகு என்ன நடந்தது என்பதை DTS சிஸ்டம் உள்ள திரையரங்கத்தில் காண்க.

இதய பலகீணம் உள்ளவர்கள்,குழந்தைகள் இந்த படத்தை பார்க்கவேண்டாம்.

 இயக்கம்:விக்ரம் கே.குமார்

இசை :சங்கர் மஹாதேவன்

தயாரிப்பு:பிக் பிக்சர்ஸ்

டாஸ்மாக் விமர்சனக் குழு

No comments: